ஐபோன் 8 வாங்குவோருக்கு அசத்தல் சலுகை வழங்கும் ரிலையன்ஸ் டிஜிட்டல்

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவங்கியதை தொடர்ந்து ரிலையன்ஸ் டிஜிட்டலில் புதிய ஐபோன் வாங்குவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 8 வாங்குவோருக்கு அசத்தல் சலுகை வழங்கும் ரிலையன்ஸ் டிஜிட்டல்
Published on

ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலம் ஐபோன் 8, ஐபோன் பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு 70 சதவிகிதம் பைபேக் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கு பின் ஐபோனினை திரும்பி வழங்குவோருக்கு பைபேக் சலுகை வழங்கப்படுகிறது.

செப்டம்பர் 22-ம் தேதி முதல் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் முன்பதிவு துவங்கியது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல், அமேசான், ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஜியோ ஸ்டோரில் இருந்து முன்பதிவு செய்து சலுகைககளை பெற முடியும்.

ஐபோன் X முன்பதிவு அக்டோபர் 27-ம் தேதி துவங்குகிறது. இதன் விற்பனை நவம்பர் 2-ம் தேதி முதல் துவங்குகிறது. ஐபோன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கென பிரத்தியேக சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. அதன்படி ரூ.799 செலுத்தி மாதம் 90 ஜிபி டேட்டா போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

தினமும் 3ஜிபி அதிவேக டேட்டா மட்டுமின்றி இலவச வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதே போல் ரூ.799 திட்டம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

செப்டம்பர் 29-ம் தேதி முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், சிட்டி பேங்க் கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com