மானியம் அல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.100 குறைப்பு

மானியம் அல்லாத சமையல் கியாஸ் விலை, சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.
சமையல் கியாஸ்
சமையல் கியாஸ்
Published on

புதுடெல்லி:

மானியம் அல்லாத சமையல் கியாஸ் விலை, சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இம்முடிவை எடுத்துள்ளன. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்தது.

டெல்லியில், ரூ.737.50 ஆக இருந்த கியாஸ் விலை, ரூ.637 ஆக குறைந்தது. மானிய சமையல் கியாஸ் விலை, ரூ.497.37-ல் இருந்து ரூ.494.35 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com