இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல் மற்றும் பட்டியலில் முன்னணி இடத்தில் உள்ள நிறுவனங்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை சார்ந்து கவுண்ட்டர்பாயிண்ட் நடத்திய ஆய்வில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி சியோமி, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. 

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் இரண்டாவது காலாண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4, ரெட்மி 4 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஜெ2 முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒப்போ A37 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஜெ7 முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளது. 

இத்துடன் இந்தியாவில் எல்டிஇ வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 15 கோடிகளை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்தியா தற்சமயம் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. எனினும் அடுத்த ஆண்டு வாக்கில் இந்தியா அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரண்டாவது காலாண்டு விற்பனையில் ரெட்மி நோட் 4 மொத்தம் 7.2 சதவிகிதம், ரெட்மி 4 4.5 சதவிகிதம், கேலக்ஸி ஜெ2 மொத்தம் 4.3 சதவிகிதம், ஒப்போ A37 மொத்தம் 3.5 சதவிகிதம் மற்றும் கேலக்ஸி ஜெ7 மொத்தம் 3.3 சதவிகிதமாக உள்ளது. 

ஸ்மார்ட்போன் பிரான்டுகளை பொருத்த வரை சாம்சங் 24 சதவிகிதம் பங்குகளும், சியோமி 15.5 சதிவிகிதம், விவோ 12.7 சதவிகிதம் மற்றும் ஒப்போ 9.6 சதவிகிதம் பங்குகளை கொண்டுள்ளது. லெனோவோ நிறுவனம் 6.8 சதிவிகிதம் விநியோகத்துடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.    

இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் ஐம்பது சதவிகிதம் 3ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் என்ற நிலையில் இரண்டாவது காலாண்டில் விற்பனை செய்யப்பட்டதில் சுமார் 96 சிதவிகிதம் ஸ்மார்ட்போன்களில் 4ஜி வசதி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பீச்சர் போன்களை பொருத்த வரை சாம்சங் 26.6 சதவிகிதம், ஐடெல் 15.7 சதவிகிதம், மைக்ரோமேக்ஸ் 8.6 சதவிகிதம், லாவா 7.5 சதவிகிதம், இன்டெக்ஸ் 6.3 சதவிகிதம் விநியோகம் செய்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து பீச்சர் போன் சந்தை வளர்ச்சி பாதையில் உள்ள நிலையில், ஜியோபோன் வரவு பீச்சர்போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com