

பிளிப்காரட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள் இரண்டாவது நாளாக வழங்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தள்ளுபடி வழங்கப்பட்டதை தொடர்ந்து விற்பனை துவங்கிய முதல் 20 மணி நேரத்தில் மட்டும் சுமார் 13 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சந்தையில் குறைந்த காலக்கட்டத்தில் அதிக ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். 2016-ம் ஆண்டு நடைபெற்ற பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் விற்றதை விட இருமடங்கு ஸ்மார்ட்போன்கள் ஒரே நாளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் ஒரே நாளில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் எண்ணிக்கையை பிளிப்கார்ட் கடந்துள்ளது. இத்துடன் போட்டி நிறுவனங்களை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முதல் நாள் விற்பனையில் பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்கியவர்களில் நான்கில் ஒருவர் பிளிப்கார்ட் பைபேக் கியாரண்டி சலுகையுடன் வாங்கியுள்ளனர். மேலும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, எக்சேஞ்ச் மற்றும் பைபேக் கியாரண்டி போன்ற சலுகைகள் வழங்கப்பட்டதால் ஒட்டுமொத்த விற்பனையில் 80 சதவிகிதம் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.