தொழிலில் நஷ்டம்- ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை

திருப்பூரில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த ரியல் எஸ்டேட் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை (கோப்புப்படம்)
தற்கொலை (கோப்புப்படம்)
Published on

திருப்பூர்:

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு 3-வது தெரு மந்த்ராச்சலம் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (35). சிறிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் சுரேஷ்குமாருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனியார் நிறுவனத்தில் வீடுகளுக்கு உணவு பொருட்கள் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சுரேஷ் குமார் மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ் குமார் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com