ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கு வழங்கிய கடன் மற்றும் வங்கிகளிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. #RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate
ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Published on

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அதன்பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இதன்மூலம் ரெப்போ 6.25 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6 சதவீதமாகவும் குறைந்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர். அப்போது குழுவில் உள்ள 4 உறுப்பினர்கள், வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க வேண்டும் என்றும், 2 உறுப்பினர்கள் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com