ராகுல் காந்தி, மம்தா, மாயாவதி ஆகிய மூவருமே பிரதமர் பதவியில் குறியாக உள்ளனர் - ரவிசங்கர் பிரசாத்

ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் மாயாவதி ஆகிய மூவருமே பிரதமர் பதவியில் குறியாக உள்ளனர் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #AntiBJPRally #MamtaBanerjee #RahulGandhi #Mayawati #RavishankarPrasad #NarendraModi
ராகுல் காந்தி, மம்தா, மாயாவதி ஆகிய மூவருமே பிரதமர் பதவியில் குறியாக உள்ளனர் - ரவிசங்கர் பிரசாத்
Published on

புதுடெல்லி:

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் உள்ள 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர். இதில் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் மக்களால் தான் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கூறினர்

இந்நிலையில், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் மாயாவதி ஆகிய மூவருமே பிரதமர் பதவியில் குறியாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஒருவரை ஒருவர் சந்தித்திராத எதிர்க்கட்சியினர் கொல்கத்தாவில் கூடியதன் நோக்கம் மோடியை அகற்றுவதே. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாயாவதி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அனைவரும் பிரதமராகும் நோக்கிலேயே உள்ளனர்.

மக்களால் தான் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. மக்கள் தேர்ந்தெடுத்த கட்சித் தலைவர் எவரேனும் இருந்தால் அதை அரசியல் கட்சிகள் கூறலாம் என குறிப்பிட்டார். #AntiBJPRally #MamtaBanerjee #RahulGandhi #Mayawati #RavishankarPrasad #NarendraModi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com