ரேசன் கடை பணியாளர்களுக்கு ரூ.200 வழங்கப்படும்- தமிழக அரசு உத்தரவு

ஊரடங்கு முடியும் வரை ரேஷன் கடை பணியாளர்களுக்கு ரூ.200 வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேசன் கடை
ரேசன் கடை
Published on

சென்னை:

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும், கொரோனா நிவாரண உதவித் தொகையான ஆயிரம் ரூபாயும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவை விலையின்றி வழங்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த 15-ந் தேதிவரை ஆயிரம் ரூபாய் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை மக்களுக்கு வழங்கும் பணியை மேற்கொள்ளும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள ரேசன் கடை பணியாளர்கள் அனைவருக்கும், அந்த காலத்திற்கு நாளொன்றிற்கு ரூ.200 தொகையை, பயணம், மற்றும் இடைநிகழ் செலவினமாக சம்பந்தப்பட்ட சங்கங்கள் அனுமதிக்க வேண்டும் என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, அது நடைமுறையில் உள்ள நாள்வரை ரூ.200 தொகை, பயணம், மற்றும் இடைநிகழ் செலவினமாக ரேசன் கடை பணியாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com