திருத்தணியில் இருந்து ஆந்திராவுக்கு ரெயிலில் ரேசன் அரிசி கடத்தல்

திருத்தணியில் இருந்து ஆந்திராவுக்கு ரெயில் மூலம் கடத்த முயன்ற 40 மூட்டை ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருத்தணியில் இருந்து ஆந்திராவுக்கு ரெயிலில் ரேசன் அரிசி கடத்தல்
Published on: 

பள்ளிப்பட்டு:

திருத்தணியில் இருந்து ஆந்திராவுக்கு ரெயில்களில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று காலை திருத்தணி ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற ரெயில் நிலையத்தில் நின்றது. அந்த நேரத்தில் பிளாட்பாரத்தில் நின்ற மர்ம நபர்கள் ரெயில் பெட்டிகளில் ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றினர்.

இதனை கண்ட ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனே ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மொத்தம் 40 மூட்டை ரேசன் அரிசி ரெயிலில் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை திருத்தணியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். ரேசன் அரிசி கடத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது.

திருத்தணி மற்றும் சுற்றப்புற பகுதிகளில் உள்ளவர்களிடம் ரேசன் அரிசிகள் மொத்தமாக வாங்கப்பட்டு ஆந்திராவுக்கு ரெயில்கள் மற்றும் வாகனங்களில் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X