இளம் வயதில் சர்வதேச அணிக்கு கேப்டன்- சாதனைப் படைத்தார் ரஷித் கான்

அயர்லாந்து அணிக்கெதிராக கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், இளம் வயது கேப்டன் என்ற வரலாற்றை பதிவு செய்துள்ளார்.
இளம் வயதில் சர்வதேச அணிக்கு கேப்டன்- சாதனைப் படைத்தார் ரஷித் கான்
Published on

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் மிக இளம் வயதில் கேப்டனாக செயல்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரஷித் கான். ரஷித்கான் 19 வயது 165 நாளில் கேப்டனாக பணிபுரிந்துள்ளார். இதற்கு முன்பு வங்காள தேச அணியின் ரஜின் சாலே 20 வயது 297 நாட்களில் கேப்டனாக பணிபுரிந்தார். இதுதான் சாதனையாக இருந்தது. இதை ரஷித்கான் தற்போது தகர்த்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com