இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல இந்தியாவிற்கு அரிய வாய்ப்பு- இயன் சேப்பல்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா தொடரை வெல்ல அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என இயன் சேப்பல் கூறியுள்ளார். #ENGvIND
இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல இந்தியாவிற்கு அரிய வாய்ப்பு- இயன் சேப்பல்
Published on

விரைவில் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டு தொடர்களையும் இந்தியா கைப்பற்ற அபூர்வ வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகரும் ஆன இயன் சேப்பல் கூறியுள்ளார்.

இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி தொடரைக் வெல்ல அரிய வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து லார்ட்ஸ் டெஸ்டில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதன்பின் ஹெட்டிங்லேயில் வெற்றி பெற்றது. அந்த அணி சீரான நிலைத்தன்மையுடன் இல்லாமல் உள்ளது.

தற்போது இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவது தற்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அலஸ்டைர் குக்கின் இரண்டு இரட்டை சதங்கள் அவருடைய உண்மையான முகத்தை மறைக்க முடியாது. கடந்த 12 மாதங்களில் 29 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இதில் 19 முறை 20 ரன்களுக்கு கீழ் எடுத்து்ளளார். 10 முறை ஒற்றையிலக்க ரன்னாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com