அமெரிக்கா: கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பிரபல ராப் பாடகர் உள்பட 3 பேர் பலி

அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பிரபல ராப் பாடகர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ராப் பாடகர் கிங் வோன்
ராப் பாடகர் கிங் வோன்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர் கிங் வோன். 26 வயது நிரம்பிய ராப் பாடகர் கிங் வோன்னின் இயற்பெயர் டேவான் பென்னெட். இவர் தனது நண்பர்களுடன் நேற்று அட்லாண்டா மாநிலத்தில் உள்ள இரவு கேளிக்கை விடுதிக்கு சென்றிருந்தார். 

அந்த கேளிக்கை விடுதி இருந்த மற்றொரு தரப்பினருக்கும் கிங் வோன் தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. 

வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை தடுக்கும் விதமாக அங்கிருந்த போலீஸ் ஒருவரும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சண்டையின் போது ராப் பாடகர் கிங் வோன்னின் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். இரு தரப்பு மோதலில் ராப் கிங் வோன் உயிரிழந்ததாகவும், போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாடகர் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com