

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 88 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. ஷோரோ 123 ரன்னுடனும், விகாஸ் மிஸ்ரா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. 101-வது ஓவரை விதர்பா வேகப்பந்து வீச்சாளர் ராஜ்னீஷ் குர்பானி வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் விகாஸ் மிஸ்ரா க்ளீன் போல்டானார். ஆஃப்ஸ்டம்ப் பல அடி தூரம் பறந்து சென்று விழுந்தது.
அடுத்து சாய்னி களம் இறங்கினார். 101-வது ஓவரின் 6-வது பந்தில் சாய்னியும் க்ளீன் போல்டானார். மீண்டும் 103-வது ஓவரை குர்பானி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஷோரே (145 ரன்கள்) க்ளீன் போல்டானார். இதன்மூலம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் குர்பானி.
இதே ஓவரின் ஐந்தாவது பந்தில் கெஜ்ரோலியாவை க்ளீன் போல்டாக்கி டெல்லி அணியை 295 ரன்னில் ஆல்அவுட் ஆக்க செய்தார். குர்பானியின் அபார பந்து வீச்சால் டெல்லி அணி கடைசி நான்கு விக்கெட்டுக்களை 6 ரன்னுக்குள் இழந்தது. குர்பானி 24.4 ஓவரில் வீசி 59 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.