ரஞ்சி டிராபி: 2-வது நாள் ஆட்ட முடிவில் அணியின் நிலவரங்கள்

ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு 176 ரன்களில் சுருண்ட நிலையில், ஆந்திரா 7 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. மற்ற அணி ஸ்கோர்களையும் பார்ப்போம்.
ரஞ்சி டிராபி: 2-வது நாள் ஆட்ட முடிவில் அணியின் நிலவரங்கள்
Published on: 

அசாம் - டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் அசாம் 258 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய டெல்லி 2 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

கோவாவிற்கு எதிரான போட்டியில் சத்தீஸ்கர் அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 458 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆகியுள்ளது.

பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் இமாச்சல பிரதேசம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 729 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பஞ்சாப் 1 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் சேர்த்துள்ளது.

கேரளாவிற்கு எதிரான போட்டியில் ஜார்கண்ட் 202 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய கேரளா 8 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்துள்ளது.

பரோடாவிற்கு எதிரான போட்டியில் மத்திய பிரதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 551 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் பரோடா 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.

உத்தர பிரதேசத்திற்கு எதிராக ரெயில்வேஸ் அணி 182 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய உ.பி. 250 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 68 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ரெயில்வேஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

X