பலத்த சூறாவளி காற்று: ராமேசுவரம்- பாம்பன் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை

பலத்த சூறாவளி காற்று வீசுவதால் ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
Published on: 

ராமேசுவரம்:

மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த சூறாவளி வீசுகிறது. இதனால் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட் டுள்ளது. 1,100-க்கும் மேற்பட்ட விசைப்படகு களும், நாட்டுப்படகுகளும் கரையோரம் நிறுத்தப்பட் டுள்ளன.

மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காரணமாக 10 நாட்களுக்கு மேலாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியா மல் படகுகளை நிறுத்தியிருந் தனர்.

தற்போதும் சூறாவளி காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com