ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தில் இருக்கை வசதி இல்லாமல் பயணிகள் அவதி

ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தில் இருக்கை வசதி இல்லாமல் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தில் இருக்கை வசதி இல்லாமல் பயணிகள் அவதி
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தில் போதுமான இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தினமும் 200-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.

நகர பஸ்களில் சுமார் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் தினமும் வந்து செல்கின்றனர். இதையடுத்து பஸ்களில் பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக போதுமான இருக்கை வசதிகள் இல்லாததால் உட்காருவதற்கு இடம் இல்லாமல் தரையில் உட்கார வேண்டிய நிலையில் உள்ளனர்.

மேலும் பலர் கால்கடுக்க நிற்கின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பயணிகளின் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் விரைவில் பழைய பஸ் நிலையத்தில் இருக்கை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com