

சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சுழற்சி அடிப்படையில் இந்த ஆண்டு உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கன்ட் நகரில் நடைபெறுகிறது.
இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த ராணுவ மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து 3 நாள் அரசுமுறை பயணமாக புறப்பட்டு சென்ற இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பிற்பகல் தாஷ்கன்ட் வந்தடைந்தார்.