ரஷியாவில் மகாத்மா காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை

அரசுமுறை பயணமாக ரஷியா வந்துள்ள ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மாஸ்கோ நகரில் இன்று காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை
மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை
Published on

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது வெளிநாட்டு பயணத்தின் இரண்டாம் கட்டமாக இன்று ரஷியா வந்தடைந்தார்.

நாளை (6-ம் தேதி) இங்கு நடைபெறும் 19-வது இந்தியா-ரஷியா ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையேற்றும் ராஜ்நாத் சிங், முன்னதாக ரஷியாவின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி மற்றும் ராணுவ மந்திரியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்நிலையில், தாஷ்கண்ட் நகரில் இருந்து விமானம் மூலம் இன்று ரஷியா தலைநகர் மாஸ்கோ வந்தடைந்த ராஜ்நாத் சிங், இங்குள்ள இந்திய தூதரகத்துக்கு வந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com