மத்திய அரசின் பல்வேறு துறைச் செயலாளர்கள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளராக ராஜீவ் கவுபா நியமனம்

மத்திய உள்துறை செயலாளராக இருந்த ராஜீவ் மெஹ்ரிஷி மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு ராஜீவ் கவுபா நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறைச் செயலாளர்கள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளராக ராஜீவ் கவுபா நியமனம்
Published on

புதுடெல்லி:

மத்திய உள்துறை செயலாளராக இருந்த ராஜீவ் மெஹ்ரிஷி மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு ராஜீவ் கவுபா நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் 17 துறைகளுக்கு செயலாளர்களை நியமனம் மற்றும் பணியிட மாற்றம் செய்து பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, உள்துறை செயலாளராக இருந்த ராஜீவ் மெஹ்ரிஷி மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு ராஜீவ் கவுபா நியமிக்கப்பட்டுள்ளார். மெஹ்ரிஷிக்கு இரு மாதங்கள் இன்னும் பதவிக்காலம் இருக்கும் நிலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.

உலக வங்கியின் செயல் இயக்குநராக இருந்த சுமாஷ் சந்த்ரா கார்க் பொருளாதார விவகாரத்துறை செயலாளராகவும், சாலைப்போக்குவரத்து துறை செயலாளராக யுத்வீர், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளராக என்.கே சின்காவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com