ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வந்து பொதுமக்களுக்கு சேவை செய்யலாம். ரஜினிகாந்த் முடிவு அவரது சொந்த விருப்பம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
Published on

பெரியகுளம்:

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

திண்டுக்கல்லில் இன்று மாலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதற்காக பெரியகுளத்தில் இருந்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. தொண்டர்கள் பெருமளவில் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வந்து பொதுமக்களுக்கு சேவை செய்யலாம். ரஜினிகாந்த் முடிவு அவரது சொந்த விருப்பம். அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com