காலா படத்திற்குப் பிறகு அடுத்தது என்ன என்பது ஆண்டவன் கையில் இருக்கிறது: ரஜினிகாந்த்

காலா படத்திற்குப் பிறகு அடுத்தது என்ன என்பது ஆண்டவன் கையில் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணம் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.#Rajinikanth #Kaala
காலா படத்திற்குப் பிறகு அடுத்தது என்ன என்பது ஆண்டவன் கையில் இருக்கிறது: ரஜினிகாந்த்
Published on

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ஐந்தாவது நாளாக இன்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்.  அவர் மத்திய சென்னை, வடசென்னை மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக ரசிகர்கள் மத்தியில் அவர் பேசினார். 

அப்போது தனது அடுத்த படமான காலா படத்தில் வித்தியாசமான ரஜினிகாந்தை இயக்குனர் ரஞ்சித் காண்பித்திருப்பதாகவும், காலாவிற்குப் பிறகு என்ன என்பது ஆண்டவன் கையில் இருக்கிறது என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

‘எனது உயிரை மீட்டு கொண்டு வந்தது ரசிகர்களின் பிரார்த்தனைதான்.  ரசிகர்களின் அன்புக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சிங்கப்பூரில் நான் சிகிச்சை பெற்றபொழுது ரசிகர்கள் செய்த பிரார்த்தனையால் மீண்டு வந்தேன்.  சினிமா, அரசியலில் வர வேண்டாம்.  உயிரோடு வருவதே போதும் என சிகிச்சையின்பொழுது ரசிகர் ஒருவர் கடிதம் எழுதினார். முதலில் குடும்பமே முக்கியம், குடும்பம், உறவினர்களிடம் நல்ல மதிப்பை பெற வேண்டும்’ என்றும் ரஜினிகாந்த் பேசினார்.

எனவே, காலா படத்தின் பணிகளை முடித்தபின்னர் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபடலாம் என கூறப்படுகிறது. #Rajinikanth #Kaala

X

Maalai Malar
www.maalaimalar.com