

சிவகாசி:
சிவகாசியில் தி.மு.க., காங்கிரஸ், தினகரன் அணி உட்பட பல்வேறு மாற்றுக் கட்சியினர் சுமார் 500 பேர் அந்த கட்சிகளிலிருந்து விலகி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க. வில் இணைந்தனர்.
வேண்டுராயபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து தலைமையில் தி.மு.க. பிரமுகர்கள் மாடசாமி பாண்டியன், பெருமாள், செல்வம், பால முருகன், பொன்னுச்சாமி, மணிகண்டன், சுந்தர்ராஜ், வீமன்ராஜ், கருப்பசாமி, கோப்பையநாயக்கன்பட்டி தி.மு.க. பிரமுகர்கள் ராமராஜ், தங்கமுத்து, வைரமுத்து, கிருஷ்ணசாமி, கருப்பசாமி, குமரவேல், பொன்ராஜ், தினகரன் அணியின் மாயக்கண்ணன், சாமி நத்தம் தி.மு.க. பிரமுகர் வைரமுத்து, தினகரன் அணியின் பாலகிருஷ்ணன், மணிகண்டன், முத்துராஜ், செல்லையா, அய்யப்பன், அருணாசலபுரம் தி.மு.க. பிரமுகர் மாரிமுத்து, தங்கபாண்டி, செல்வம், காங்கிரஸ் பிரமுகர் முத்து ராஜ் உட்பட 500 பேர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்று பணியாற்றிட மாற்றுக்கட்சிகளிலிருந்து வந்துள்ள அனைவரையும் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்கின்றேன். மாற்றுக்கட்சிகளிலிருந்து வந்துள்ள அனைவருக்கும் நல்ல எதிர்காலம் அமையும்.
அ.தி.மு.க.விற்கு நம்பி வந்தவர்கள் கெட்டுப்போன வரலாறு கிடையாது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்று அனைவரும் களப்பணியாற்றுங்கள். விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி பதவிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும் வகையில் அனைவரும் செயலாற்ற வேண்டும் என்றார்.
ராதாகிருஷ்ணன் எம்.பி., சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மச்சக்காளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.