அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை அதிகம் சேர்க்க வேண்டும்- ராஜன்செல்லப்பா வலியுறுத்தல்

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பேசிய ராஜன்செல்லப்பா எம்எல்ஏ, புதிய உறுப்பினர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்றார்.
அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை அதிகம் சேர்க்க வேண்டும்- ராஜன்செல்லப்பா வலியுறுத்தல்
Published on

மதுரை:

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவனியாபுரம், திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் அம்மா வழியில் சிறப்பான ஆட்சி நடத்திவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வலு சேர்க்கும் வகையில் அயராது உழைக்க வேண்டும்.

1½ கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கமாக திகழும் அ.தி.மு.க.வை மேலும் வலிமையாக்க இளைஞர்களையும், பொதுமக்களையும் அதிக அளவில் சேர்க்க வேண்டும்.

குறிப்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பொதுமக்களை சந்தித்து கட்சியில் சேர்க்க உழைக்க வேண்டும்.

எந்த தேர்தல் வந்தாலும் அதில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும். அதற்கேற்ப நாம் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், முத்துக்குமார், முனியாண்டி, ராமகிருஷ்ணன், பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com