மதுரை பி.பி.குளத்தில் பாலம் அமைக்கும் பணி- ராஜன் செல்லப்பா ஆய்வு

மதுரை பி.பி.குளத்தில் ரூ.70 லட்சம் செலவில் பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உத்தரவிட்டுள்ளார்.
பாலம் கட்டும் பணிகளை ராஜன்செல்லப்பா எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்த காட்சி.
பாலம் கட்டும் பணிகளை ராஜன்செல்லப்பா எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்த காட்சி.
Published on

மதுரை:

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பி.பி.குளம் 4 வழி சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.70 லட்சம் மதிப்பில் அங்கு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணிகளை அவர் இன்று ஆய்வு செய்தார்.

அப்போது மேம்பால பணிகளை 2 மாதங்களுக்குள் முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது முன்னாள் மண்டலதலைவர் ஜெயவேல், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் மற்றும் பலர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com