பீகாரில் கனமழை: மாநில சாலைகட்டுமானத்துறை மந்திரியின் வீட்டை சூழ்ந்த மழை நீர்

பீகார் மாநிலத்தின் இன்று கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாநில சாலைகட்டுமானத்துறை மந்திரியின் வீட்டை சுற்றிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
மந்திரியின் வீட்டை சூழ்ந்த மழைநீர்
மந்திரியின் வீட்டை சூழ்ந்த மழைநீர்
Published on

பாட்னா:

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. 

இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள மாநில சாலை கட்டுமானத்துறை மந்திரி நந்த கிருஷ்ண யாதவின் வீட்டை சுற்றிலும் குளம்போல மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை நீர் மந்திரியின் வீடு முழுவதும் நுழைந்து குளம் போல காட்சியளிக்கிறது.

கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகாரில் பாஜகவை சேர்ந்த நந்த கிருஷ்ண யாதவ் சாலை கட்டுமானத்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார்.  

சாலை போக்குவரத்துத்துறை மந்திரியின் வீட்டை சுற்றிலும் குளம்போல மழை நீர் சூழ்ந்துள்ள புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வலைதளவாசிகள் இந்த புகைப்படத்தை நகைச்சுவையுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com