சையத் முஸ்தாக் அலி டி20 தொடர் - புஜாரா சதமடித்தும் ரயில்வேஸ் அணியிடம் வீழ்ந்தது சவுராஷ்டிரா அணி

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்றில் சவுராஷ்டிரா அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ரயில்வேஸ் அணி. புஜாராவின் அதிரடி சதம் வீணானது. #SyedMushtaqAliTrophy #Pujara
சையத் முஸ்தாக் அலி டி20 தொடர் - புஜாரா சதமடித்தும் ரயில்வேஸ் அணியிடம் வீழ்ந்தது சவுராஷ்டிரா அணி
Published on

இந்தூர்:

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்று போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கியது.

சி பிரிவில் இடம் பிடித்துள்ள சவுராஷ்டிரா மற்றும் ரயில்வேஸ் அணிகள் இந்தூரில் மோதின. டாஸ் வென்ற ரயில்வேஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து சவுராஷ்டிரா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹவிக் தேசாய், புஜாராவும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். தேசாய் 34 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராபின் உத்தப்பா 46 ரன்னில் வெளியேறினார்.

மறுபுறம், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராக கருதப்பட்ட புஜாரா அதிரடியாக ஆடி 60 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இது டி20 போட்டியில் புஜாராவின் முதல் சதமாகும். இறுதியில், சவுராஷ்டிரா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 188 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய ரயில்வேஸ் அணியில் மிருணாள் தேவ்தார் 49 ரன்னும், பிரதம் சிங் 40 ரன்னும் எடுத்தனர். இறுதிவரை போராடிய அபினவ் தீக்சித் 37 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. புஜாராவின் அதிரடி சதம் வீணானது. #SyedMushtaqAliTrophy #Pujara

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com