பிரதமர் மோடியின் பிறந்தநாள்: ராகுல் காந்தி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 67-வது பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாள்: ராகுல் காந்தி வாழ்த்து
Published on

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் சேவை தினமாக கொண்டாடி வருகின்றனர். இன்று 67-வது பிறந்தநாளை காணும் பிரதமருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மோடியை வாழ்த்தியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதில் வல்லவரான காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தனது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு ஞானத்தை அளிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com