முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நாளை சந்திக்கின்றனர்

டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை சந்திக்கின்றனர்.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
Published on

புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் நாளையுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை நேரில் சந்தித்துப் பேச உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com