

புதுடெல்லி:
புதிய காங்கிரஸ் தலைவர் குறித்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை நடத்தி வருகிறது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் காணொலி மூலம் பங்கேற்றுள்ளார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி கூறியதாவது:
* பாஜவுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு தொடர்பு உள்ளது.
* சோனியாவுக்கு எதிராக கடிதம் எழுதிய 23 தலைவர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள்.
* ராஜஸ்தான் ஆட்சி விவகாரம், மருத்துவமனையில் சோனியா இருந்தபோது கடிதம் எழுதலாமா?
* தலைமை மாற்றம் என்பது காரிய கமிட்டியில் விவாதிக்க வேண்டியது; ஊடகத்தில் அல்ல.
* தலைமையில் மாற்றம் தேவை என கடிதம் எழுதியவர்கள் பின்னணியில் பாஜக உள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இதையடுத்து ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கடந்த 30 ஆண்டுகளில் பாஜகவிற்கு ஆதரவாக ஒரு கருத்து கூட கூறியதில்லை. ராஜஸ்தான் நீதிமன்றத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக வாதாடி வெற்றி கண்டோம் என்று கபில் சிபல் கூறினார்.
பாஜகவுடன் நாங்கள் தொடர்பில் இருப்பதை நிரூபித்தால் விலகத் தயார் என குலாம் நபி ஆசாத் காட்டமாக தெரிவித்துள்ளார்.