சிதம்பரத்தை சிறையில் அடைத்திருந்தது பழிவாங்கும் செயல் - ராகுல் காந்தி

முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை சிறையில் வைத்திருந்தது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், ப.சிதம்பரத்தை சிறையில் வைத்திருந்தது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், சிதம்பரத்தை 106 நாட்கள் சிறையில் வைத்தது முற்றிலும் வஞ்சகம் மற்றும் பழிவாங்கும் செயலாகும். உச்ச நீதிமன்றம், சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியை தருகிறது. நியாயமான வழக்கு விசாரணையில் தன்னை குற்றமற்றவர் என்று சிதம்பரம் நிரூபிப்பார் என்று நான் 100 சதவீதம் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com