சத்தீஸ்கர் மாநில புதிய காங்கிரஸ் செயலாளராக சந்தன் யாதவ் நியமனம்

சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளராக சந்தன் யாதவ் என்பவரை நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். #rahulgandhi #ChandanYadav
சத்தீஸ்கர் மாநில புதிய காங்கிரஸ் செயலாளராக சந்தன் யாதவ் நியமனம்
Published on

புதுடெல்லி:

டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, முக்கிய பொறுப்பிகளில் உள்ளவர்கள் இளையதலைமுறையினருக்கு வழிவிட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, ஒடிசா, குஜராத், கர்நாடம் ஆகிய மாநில உயர் பொறுப்பாளர்களாக இளைய தலைமுறையினர் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளராக சந்தன் யாதவ் என்பவரை நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை இந்த பொறுப்பை வகித்துவந்த கமலேஷ்வர் யாதவ் ஆற்றிய பணிகளை கட்சி தலைமை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வதாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஷோக் கேலாட் குறிப்பிட்டுள்ளார். #tamilnews #rahulgandhi #ChandanYadav

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com