மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் - ராகுல் காந்தி, மம்தா வாழ்த்து

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #HBDMKStalin
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் - ராகுல் காந்தி, மம்தா வாழ்த்து
Published on

புதுடெல்லி:

 தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 65-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி ஆழ்வார் பேட்டையில் அவரது வீட்டில் குடும்பத்தினர் மத்தியில் பிறந்த நாள் கேக் வெட்டினார். வேப்பேரி பெரியார் நினைவிடம், மெரீனா கடற்கரை அண்ணா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். 

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சுப.வீரபாண்டியன் உள்பட பல தலைவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த நாளில் அவர் நல்ல உடல் நலமும், மன அமைதியுடனும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்றார்.  

இதேபோல், மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி டுவிட்டரில் கூறுகையில், ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். #HBDMKStalin #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com