

நூற்றாண்டு கால பழமையும், கவுரவமும் மிக்க ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 21-13, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் நிட்சவோன் ஜிண்டாபோலை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், இந்தோனேசியாவின் டாமி சுகியார்டோவை எதிர்கொண்டார். இதில் அதிரடியாக விளையாடிய பிரனோய் 21-10, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.