

சென்னை:
இந்தியாவின் விடுதலைக்காக உழைத்த 161 தியாகிகளின் வாழ்க்கை வரலாறை விளக்காமன முறையில் சித்தரிக்கும் 'இந்திய சுதந்திர சிற்பிகள்’ என்ற தமிழ் நூலின் முதல் பதிப்பு முன்னர் வெளியானது.
இந்நிலையில், 'இந்திய சுதந்திர சிற்பிகள்’ தமிழ் நூலின் இரண்டாம் பதிப்பு மற்றும் இந்தியாவின் விடுதலைக்காக உழைத்த 166 தியாகிகளின் வாழக்கை வரலாறை விவரிக்கும் இந்நூலின் இந்தி பதிப்பை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று வெளியிட்டார்.
வழக்கறிஞர் வி.நந்தகுமார் தொகுத்துள்ள இந்த நூல் பாயின்ட் கேலிபர் சர்வதேசப் பள்ளியின் சார்பில் இன்று இரண்டாம் பதிப்பாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்தநூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.முரளி, ஆரிபா கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.சுல்தானுல் ஆரிஃபீன், நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறையில் உள்ள பாயின்ட் கேலிபர் சர்வதேசப் பள்ளியின் முதல்வர் பி.சிராஜுன்னிசா பேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.