புரோ கபடி லீக்: பெங்களூருவை வீழ்த்தி 6வது வெற்றியை பெற்றது புனே அணி

புரோ கபடி லீக் தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 42 - 38 என்ற புள்ளி கணக்கில் புனே அணியை வீழ்த்தி ஆறாவது வெற்றியை பதிவு செய்தது.
பெங்களுரு வீரரை மடக்கிய புனே வீரர்கள்
பெங்களுரு வீரரை மடக்கிய புனே வீரர்கள்
Published on

புனே:

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே புனே வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் அந்த அணி முதல் பாதியின் முடிவில் 20 - 15 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் புனே அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் பெங்களூரு அணியினரின் ஆட்டம் எடுபடவில்லை.

ஆட்டத்தின் முடிவில், பெங்களூரு புல்ஸ் அணியை 42 -38 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய புனேரி பால்டன் அணி தனது ஆறாவது வெற்றியை பெற்றது.

17-வது ஆட்டத்தில் ஆடிய புனேறி பால்டன் அணி சந்தித்த 6-வது வெற்றி இதுவாகும். 17-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு புல்ஸ் அணி பெற்ற 8-வது தோல்வி இதுவாகும். இந்த வெற்றி மூலம் புனே அணி புள்ளிப்பட்டியலில் 8ம் இடத்தை பிடித்துள்ளது.

மற்றொரு போட்டியில் மோதிய பாட்னா பைரேட்ஸ் மற்றும் தெலுகு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 42 -42 என்ற புள்ளிக்கணக்கில் சமனில் முடிந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com