

புளியங்குடி:
தென்காசி மாவட்டத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் மேலும் ஒருவர் வேறு மாவட்டத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் புளியங்குடியை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 72 வயது முதியவரின் தெரு மற்றும் அதன் அருகே உள்ள மற்றொரு தெருவை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்கள் 4 பேரும் இரவோடு இரவாக ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களையும் சேர்த்து தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களில் 9 பேர் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.