பெங்களூரில் இருந்து சைபர்கிரைம் அதிகாரி பேசுவதுபோல் வாலிபரை மிரட்டி ரூ.8½ லட்சம் பறிப்பு

சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.
கைது
கைது
Published on: 

புதுவை தட்டாஞ்சாவடியை சேர்ந்த ஒருவரின் செல்போனில் டெலிகாம் அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு ஒருவர் பேசியுள்ளார்.

அவர் உங்கள் ஆதார் எண் சட்டவிரோத வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். பின்னர் அவர் பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி போல நடித்த மற்றொரு நபரிடம் போனை மாற்றி கொடுத்துள்ளார்.

டிஜிட்டல் அரெஸ்ட்

அவர்கள் தட்டாஞ்சாவடியை சேர்ந்த நபரை "டிஜிட்டல் அரெஸ்ட்" செய்து விட்டதாக கூறி மிரட்டியுள்ளனர்."நீங்கள் சர்வதேச குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளீர்கள். விசாரணைக்காக பணத்தை அனுப்புங்கள்" என்று கூறியுள்ளனர்.

இதில் பயந்து போன அவரிடம் இருந்து ரூ.8 லட்சத்து 56 ஆயிரத்தை- ஐ பறித்துள்ளனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.

X