புதுச்சேரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்துள்ளனர்.
புதுச்சேரி கடற்கரையில்  குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on: 
Summary

பல மாநிலங்களில் இருந்து வந்த பயணிகள் ஆர்வத்துடன் சூரிய உதயத்தை காண கடற்கரை சாலையில் இன்று அதிகாலையிலேயே குவிந்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தீபாவளிக்கு மறுநாளான இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இதேபோல் வேறு சில மாநிலங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்துள்ளனர்.

சூரிய உதயம்

பல மாநிலங்களில் இருந்து வந்த பயணிகள் ஆர்வத்துடன் சூரிய உதயத்தை காண கடற்கரை சாலையில் இன்று அதிகாலையிலேயே குவிந்தனர். ஆனால் பனி மூட்டம் காரணமாக சூரிய உதயம் தெரியவில்லை.

இருப்பினும் சுற்றுலா பயணிகள் கடல் நீரில் விளையாடியும், கடற்கரை பாறைகளில் அமர்ந்தும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

X