புதுச்சேரி ஜெயிலில் கைதிகளுக்கு செல்போன் வீசிய ரவுடிகள்

கைதிகள் கார்த்திகேயன் உட்பட 3 பேர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி ஜெயிலில் கைதிகளுக்கு செல்போன் வீசிய ரவுடிகள்
Published on: 
Summary

விசாரணையில் செல்போன் மற்றும் சார்ஜர்களை பதுக்கியது, விசாரணை கைதிகள் கார்த்திகேயன், சூர்யா, அப்துல் நசீர் ஆகியோர் என தெரியவந்தது.

புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த ஜெயிலில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 1200க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான வார்டன்கள் ஜெயிலில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது விசாரணை கைதிகள் வளாகம், உள் சுவருக்கும், வெளி காம்பவுண்ட் சுவருக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு செல்போன் மற்றும் 4 சார்ஜர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணை கைதிகள்

விசாரணையில் செல்போன் மற்றும் சார்ஜர்களை பதுக்கியது, விசாரணை கைதிகள் கார்த்திகேயன், சூர்யா, அப்துல் நசீர் ஆகியோர் என தெரியவந்தது.

போலீசார் வழக்கு பதிவு

மேலும் விசாரணையில் இவர்களுக்கு ரவுடிகளான அவர்களது கூட்டாளிகள் வெளியில் இருந்து ஜெயிலுக்குள் செல்போன் மற்றும் சார்ஜர்களை வீசியதும் தெரியவந்தது. இது குறித்து ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில், கைதிகள் கார்த்திகேயன் உட்பட 3 பேர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X