

தேர்தல் நடைமுறை மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு வெளிப்படையான பதில் அளிக்க வேண்டும். மக்களின் வாக்குரிமை ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. வாக்கின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலை உருவாகக் கூடாது. வாக்குரிமை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க இளைஞர் காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.
புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நூதன போராட்டம் நடத்தினர்.
வெள்ளை முகமூடி அணிந்தும், நீல நிற கை உறை அணிந்து தேர்தல் ஆணைய்ர் ஞானேஸ்குமாரை கைது செய்யுங்கள்... தேர்தல் ஆணையத்தை காப்பாற்றுங்கள்..என கைகளில் பதாகைகள் வைத்திருந்தனர். தொடர்ந்து நூதன போராட்டம் குறித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் கூறியதாவது:-
வெள்ளை முகமூடி என்பது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டு வாக்குரிமையை இழந்த மக்களை குறிக்கும். நீல நிற கை உறை வாக்குரிமையை பாதுகாக்கும் போராட்டத்தின் அடையாளம்.
நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளது.
தேர்தல் நடைமுறையில் முழுமையான வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். ஒருபுறம் இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக போராடி வருகின்றனர். இந்த நிலையில் தங்களது வாக்குரிமையையும் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல்
தேர்தல் நடைமுறை மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு வெளிப்படையான பதில் அளிக்க வேண்டும். மக்களின் வாக்குரிமை ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. வாக்கின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலை உருவாகக் கூடாது.
வாக்குரிமை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க இளைஞர் காங்கிரஸ் தொடர்ந்து போராடும். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். அவர் மீது எழுப்பப் பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.