

புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார். போலீசார் விசாரணையில் குற்றம் உறுதியாக, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் இருந்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.