வைத்திலிங்கத்தை தொடர்ந்து புதுச்சேரி காரைக்கால் மாவட்ட காங்., தலைவர் ராஜினாமா

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.
வைத்திலிங்கத்தை தொடர்ந்து புதுச்சேரி காரைக்கால் மாவட்ட காங்., தலைவர் ராஜினாமா
Published on

புதுவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.

21 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரமோகன், தனது பதவியை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com