சவப்பெட்டியில் பாய்ந்த மின்சாரம்: துக்கம் விசாரிக்க சென்ற மூதாட்டி உயிரிழப்பு

சவபெட்டியில் கை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Freezer box
Published on

புதுவை அரியாங்குப்பம் அருகே காக்கையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது49). இவர் உடல் நலக்குறைவால் இறந்து போனார்.

இவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் சவபெட்டியில் (பிரீசர் பாக்ஸ்) வைக்கபட்டு இருந்தது.

இன்று காலை அதே பகுதியை சேர்ந்த ராஜாத்தி (75) மற்றும் ஒருவர் துக்கம் விசாரிக்க சென்றனர். அங்கு சவபெட்டியில் கை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது திடீரென அவர்கள் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் உஷாராகி மற்றவர்கள் சவபெட்டியை தொடாத வண்ணம் தடுத்துவிட்டனர்.

மேலும், சவபெட்டிக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து மின்சாரம் தாக்கி காயமடைந்தவர்களை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜாத்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து மின்சாரம் தாக்கி காயமடைந்த மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் மின்சார கசிவு ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com