புதுச்சேரி பா.ஜ.க. தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம்

சாமிநாதனின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரி பா.ஜ.க. தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம்
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜ.க. தலைவராக சாமிநாதன் கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பா.ஜ.க. கட்சி விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்.

அந்த வகையில் சாமிநாதனின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

அதன்பின் 2020-ம் ஆண்டு மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் மாநில தலைவர் பதவியை பிடிக்க கட்சி நிர்வாகிகள் பலரும் முயற்சித்து வந்தனர்.

இந்தநிலையில் பா.ஜ.க.வின் புதுவை மாநில தலைவராக செல்வகணபதி எம்.பி. நேற்று நியமிக்கப்பட்டார். இதனை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com