பெண்களின் உள்ளாடைகளை திருடி தொங்கவிட்டு ரசிக்கும் சைக்கோ

பாழடைந்த பயன்படுத்தாத வீடு ஒன்றை சமூக விரோதிகள் மதுபாராக மாற்றி விட்டனர்.
பெண்களின் உள்ளாடைகளை திருடி தொங்கவிட்டு ரசிக்கும் சைக்கோ
Published on
Summary

கம்பிகளில் காயப்போட்டிருக்கும் துணிகள் காணாமல் போனதால், பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண், பாழடைந்த வீட்டில் சென்று பார்த்த போது, அங்கு அவரது உள்ளாடைகள் கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

புதுச்சேரி முதலியார்பேட்டை கடலூர் மெயின் ரோட்டையொட்டி அரசு நடுநிலைப் பள்ளி எதிரே சிங்கிடிநாயகர் வீதி உள்ளது. இங்கு பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் பயன்படுத்தப்படாத பல வீடுகள் உள்ளன. அதன்படி பாழடைந்த பயன்படுத்தாத வீடு ஒன்றை சமூக விரோதிகள் மதுபாராக மாற்றி விட்டனர்.

உள்ளாடைகள் திருட்டு

அங்குள்ள மதுபான கடையில் மதுபானங்களை வாங்கி வரும் அவர்கள், இந்த வீட்டில் அமர்ந்து குடித்து விட்டு, பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் மது பாட்டில்கள் அங்கு குவியல், குவியலாக குவிந்து கிடக்கின்றன. மது குடிப்பது மட்டுமின்றி பக்கத்து வீட்டின் கம்பிகளில் துவைத்த துணிகளை காயப்போட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகளையும் திருடி சென்று விடுகின்றனர். அந்த உள்ளாடைகளை பாழடைந்த வீட்டில் சுவர்களில் தொங்க விட்டும், தரையிலும் போட்டு சென்றும் விடுகின்றனர்.

வீடியோ வைரல்

கம்பிகளில் காயப்போட்டிருக்கும் துணிகள் காணாமல் போனதால், பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண், பாழடைந்த வீட்டில் சென்று பார்த்த போது, அங்கு அவரது உள்ளாடைகள் கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அங்கு காலி மது பாட்டில்களும் கிடந்துள்ளன. பாதிக்கப்பட்ட அந்த பெண், இது குறித்து அரசும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி வேதனையுடன் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com