தொடர் மின்தடை- ஜிப்மர் இயக்குனர் வீட்டை ஊழியர்கள் முற்றுகை

கடந்த சில நாட்களாக ஜிப்மர் ஊழியர்கள் குடியிருப்பில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர் மின்தடை- ஜிப்மர் இயக்குனர் வீட்டை ஊழியர்கள் முற்றுகை
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் ஜிப்மர் இயக்குனர், டீன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கான குடியிருப்புகளும் உள்ளன.

கடந்த சில நாட்களாக ஜிப்மர் ஊழியர்கள் குடியிருப்பில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஊழியர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

அதுபோல் நேற்று நள்ளிரவும் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் அங்குள்ள ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையேற்று ஜிப்மர் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நள்ளிரவில் நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com