

தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தலுக்கு பிறகு இந்த ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒரு குழந்தையின் உயிர் பலிக்கு பிறகே அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பைசல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
பொதுமக்கள் அதிகம் நடமாடும் முக்கிய சுற்றுலா பகுதியில் நேர்ந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் வலியுறுத்தின.
இதன் எதிரொலியாக மின்துறை அதிகாரிகள் கடற்கரை சாலை முழுவதும் உள்ள மின்கம்பங்களை ஆய்வு செய்தனர். துருப்பிடித்து, பலவீனமாகி எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாயகரமான நிலையில் இருந்த மின் கம்பங்களை கண்டறிந்து அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
கடற்கரை சாலையில் தற்போதுள்ள அலங்கார மின்கம்பங்கள் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.1.23 கோடி செலவில் 63 கம்பங்கள் அமைக்கப்பட்டன. இதன் பயன்பாட்டு காலம் 10 ஆண்டுகள் தான். ஆனால் 14 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
எனவே அனைத்து கம்பங்களையும் அகற்றிவிட்டு, கடற்கரை சாலை மற்றும் ஒயிட்டவுன் பகுதிகளில் சுமார் 110 புதிய அலங்கார மின்கம்பங்களை மாற்றி அமைக்க ரூ.6.38 கோடி மதிப்பீட்டில் உள்ளாட்சி துறை மூலம் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டுள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தலுக்கு பிறகு இந்த ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒரு குழந்தையின் உயிர் பலிக்கு பிறகே அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.