

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக பல்வேறு விதமான பட்டாசுகள் விற்பனைக்கு வருகின்றன.
இந்த ஆண்டு புதுச்சேரி கூட்டுறவு விற்பனை விநியோக சங்க பட்டாசு கடைகளில் பல்வேறு விதமான பட்டாசுகள், துப்பாக்கிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் பட்டாசு கொளுத்துபவர்கள் மட்டுமில்லாமல் சாலையில் செல்பவர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ரூ.215க்கு 'மணி பேங்க்' பட்டாசு வந்துள்ளது.
இந்த பட்டாசு பெட்டியில் பெரிய புஸ் வானம் சைசில் 2 பட்டாசுகள் இருக்கும். இந்த பட்டாசை வாங்கி வைத்து கொளுத்தினால், ஒரு பட்டாசிலிருந்து 500 ரூபாய் டம்மி நோட்டுகள் கொட்டும். இன்னொரு பட்டாசை கொளுத்தினால் அதிலிருந்து 2000 ரூபாய் டம்மி நோட்டுகள் கொட்டும். இதனை சாலையில் செல்பவர்கள் ஆச்சரியமடைந்து சாலையில் சிதறி கிடக்கும் ரூபாய் நோட்டுகளை எடுத்து பார்த்து ஏமாற்றமடைகின்றனர்.