குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch கற்றுக் கொடுப்பது அவசியம்: யுவன்

புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர்இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்சனையாக உள்ளது
குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch கற்றுக் கொடுப்பது அவசியம்: யுவன்
Published on

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்சனையாக உள்ளது. 28.9% குழந்தைகள் ஏதோ ஒரு வகையான பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்.

குழந்தைகளுக்கு GOOD TOUCH, BAD TOUCH கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமானது. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு நற்குணங்களை போதித்து வளர்ப்பதும் அவசியம்.

புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர். இதனால் பல தீமைகளை நாம் எதிர்கொள்கிறோம் என்பது புரிகிறது. பாதுகாப்பான நாடாகவும், ஒன்றுபட்ட சமூகமாகவும் வளர்வோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com