

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆகஸ்டு மாதம் உள்நாட்டு ஜி.எஸ்.டி. ரூ.195 கோடி வசூலாகியுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் ரூ.225 கோடி வசூலான நிலையில், இந்தாண்டு 13 சதவீதம் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் 2026-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் குறித்து சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
அதன்படி கடந்த மாதம் மொத்தம் ஜி.எஸ்.டி. ரூ.1,99,853 கோடியாக பதிவாகியுள்ளது. இது கடந்தாண்டை ஒப்பிடுகையில் 14.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில் உள்நாட்டு ஜி.எஸ்.டி. ரூ.1,37,249 கோடியாக இருந்து 9 சதவீதமும், இறக்குமதி மூலம் கிடைத்த ஜி.எஸ்.டி. ரூ.90,925 கோடியாக இருந்து 29.2 சதவீதமும் உயர்ந்துள்ளது. மேலும் ஆகஸ்டு மாதத்தில் மொத்தமாக ரூ.31,795 கோடி ஜி.எஸ்.டி. திருப்பி தொகை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாட்டின் நிகர ஜி.எஸ்.டி. வருவாய் 8.3 சதவீதம் உயர்ந்து ரூ.1,68,057 கோடியாக உள்ளது. மாநில வாரியான உள்நாட்டு ஜி.எஸ்.டி. வசூலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆகஸ்டு மாதம் உள்நாட்டு ஜி.எஸ்.டி. ரூ.195 கோடி வசூலாகியுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் ரூ.225 கோடி வசூலான நிலையில், இந்தாண்டு 13 சதவீதம் குறைந்துள்ளது.
அதேநேரத்தில், புதுச்சேரியின் எஸ்.ஜி.எஸ்.டி. ரூ.49 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் மாநிலங்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி. பங்கீடு செய்யப்பட்ட பின் கிடைக்கும் பிந்தைய எஸ்.ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.141 கோடியாக உயந்துள்ளது.